கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா முழுவதும் NPRக்கு எதிரான சனநாயக சக்திகளின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
ஆனாலும் கூட போராட்ட மனநிலையிலிருந்து மக்கள் பின் வாங்குகிற எந்த சிந்தனையும் இல்லை
இப்போதைய நெருக்கடியான நிலையிலும் கூட தங்கள் இல்லங்களில் இருந்தவாறு சிறுபான்மை சமுதாய மக்கள் தங்களது எதிர்ப்பை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்
இந்நிலையில் கடையநல்லூரில் ஒரு பள்ளிவாசலில் ஆவணங்களை தயார் செய்யுங்கள் என கூறுகின்ற நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு மற்றும் திராவிட இயக்கங்களின் தலைவர்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும் என மக்களை வழிநடத்திக் வழி நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் இவ்வாறான நோட்டீஸ்கள் மக்களின் சிந்தனையை மடை மாற்றி விட வாய்ப்பு உள்ளது
எனவே மேற்படி பள்ளிவாசல் நிர்வாகிகளை அணுகி விளக்கம் கேட்டபோது எங்களது பள்ளியில் பேசிய இந்த பேச்சாளர் ( ஒரு கட்சியின் நிர்வாகி) இப்படித்தானே இப்படித் தானே பேசினார் எனவும் கூறினார்
எது எப்படியானாலும் NPR க்கு கெதிரான நமது போராட்ட சிந்தனையை ஒட்டுமொத்தமாக ஒரே வடிவில் கொண்டு செல்வதுதான் எதிர்கால சமுதாயத்திற்கு நல்லது
எனவே மேற்படியான பிரச்சாரங்களை மக்கள் புறக்கணிப்பு தோடு தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தபடி போராட்டங்களை முன்னெடுப்பது மட்டுமே மிகச்சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என நம்புகிறோம்
