கவலைகளுடன் சில கேள்விகள்...
கடையநல்லூர் மக்களிடம் (குறிப்பாக இசுலாமிகளிடம்) கொரோனோ விழிப்புணர்வு போதிய அளவு இன்னும் ஏற்படவில்லை...
அரகமே இல்லாமல் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. வந்தவர்கள் தங்களை தனிமைபடுத்தவும் தயாராக இல்லை.
வெளிநாட்டிலிருந்து வந்தவருடன் இணைந்து இளைஞர்கள் தம் அடிப்பதற்கு கூடும் சங்கங்கள் பூட்டப்படவில்லை.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களையும் இணைத்துக்கொண்டு ஆடும் மாலை நேர கிரிக்கெட்டும் மாறவில்லை. பல குழுக்களாக நூறுபேர் வரை ஓரே கிரவுண்டில் கூடி விளையாடுகிறார்கள். பட்டபடிப்புகள் படித்திருந்தாலும் ஓரே பந்து பலர் கைகளுக்கும் சுற்றிவருவது அந்த விளையாட்டின் இயல்பு என்பதை விளங்கவில்லை.
காலையில் கணவர் வீட்டில் இருப்பதும் மதியம் அம்மா வீட்டுக்கும் சுற்றி சுற்றி வரும் சுழற்சி மாறவில்லை. போகவேண்டாம் என சொன்னாலும் மாமி தரப்போ/மருமகள் தரப்போ அந்த பேச்சை கேட்பதற்கும் தயாரில்லை.
டீ கடையிலும்/திண்ணையிலும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு வெட்டியாய் கதையடிக்கும் பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் ஏன் வயதானவர்களிடமும் மாறவில்லை.
பள்ளிவாசல்களில் ஜமாத்தாக சில நாட்களுக்கு தொழுகையை நிறைவேற்ற வேண்டாம் என ஆயிரம் மார்க்க சட்டங்கள் விளக்கங்கள் கூறி சவூதியில் தொழுகை வழிபாடு குறித்து நடைமுறைபடுத்தப்படும் விசயங்களை எடுத்துகூறி விளக்கினாலும், எதையும் ஏற்கமாட்டேன் என்றும் தன்னை தவிர அனைவரும் இபாதத்களில் நாட்டமில்லாதவர்கள் போலவும் சித்தரிக்கும் வகையில்...
ஜமாத் தொழுகையை பள்ளிவாசலில் ஏன் தொழக்கூடாது என்ற வெட்டிக்காயிதா பேச்சு (அதிகபிரசிங்கித்தனம்) குறைந்தபாடில்லை. (ஹீலர் பாஸ்கரை பிடிச்சு உள்ளே தள்ளியது போல சில இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் உள்ளே பிடிச்சு போட்டா நல்லது)
அரசு அறிவித்துள்ள எந்த ஒழுக்கங்களையும் தடைகளையும் சரிவர பின்பற்றபடவில்லை. Social Distance ஐ அறவே பேணுவதில்லை.
ஒரு பால்குடி பழக்கம் உள்ள குழந்தைக்கு கொரோனொ தொற்று ஏற்பட்டு விட்டால் (அல்லாஹ் காப்பாற்றனும்) அந்த குழந்தையை தனிமைப்படுத்த முடியுமா?
அந்த குழந்தையின் தாய் தன்குழந்தையை அரவணைப்பதை நிறுத்த முடியுமா?
முகமூடி அணிந்து குழந்தைக்கு அருகில் சென்றால் அச்சப்படாமல் இருக்குமா?அது எவ்வகையில் சாத்தியம்? என்ற கவலைகள் யாருக்கும் தோன்றியதாக தெரியவில்லை.
டெங்குவிற்கு பலியானதை போல ஒரு சில விக்கெட்டுகள் (இறைவன் நாடி) விழுந்தால் மட்டுமே விழிப்புணர்வு உண்டாகுமா? பிறருக்கு பரவுவதில் டெங்குவை விட பலமடங்கு வேகம் கொண்ட கொரோனா தாக்கினால் நம்மால் தாக்குப்பிடிக்கத்தான் முடியுமா? ஒரே நேரத்தில் நோய்தாக்குதல் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவ வசதிகள் நம்ம ஊருல இருக்குதா?
வருமுன் காப்பதே சிறந்தது...
என்ற கருத்தை வலுயுறுத்தும் சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் 👇👇👇👇👇👇👇
1)இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்
(அல்குர்ஆன் )
2) நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:29)
03) ஆரோக்கியமான ஒட்டகத்துடன் நோயுள்ள ஒட்டகத்தை சேர்க்கவேண்டாம்
4) தொற்றுநோய் ஒரு இடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் நுழையாதீர்கள்
நீங்கள் இருக்கும் இடத்தில் தொற்று நோய்வந்தால் அந்த இடத்தை விட்டும் வெளியேறாதீர்கள்.
5) இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;

