Thursday, 19 March 2020

கோவைல் vhp யினர் இருவர் NSA வில் கைது

இம்மாதம் 5 ம் தேதி அதிகாலை கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பை சேர்ந்த அகில் , பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்திரவினை சிறையில் மாநகர காவல் துறையினர் அளித்தனர்.