Monday, 23 March 2020

MM மீடியா



கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான இடைகால் ,சொக்கம்பட்டி ஆகிய ஊர்களில் பெரும்பாலான மக்கள் சவூதி துபாய் போன்ற அரபுநாடுகளில் பணி செய்து வருவதாலும் இப்பகுதி மக்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதாலும் அரசு கூடுதல் அக்கறையோடு இப்பகுதியில் கவனம் செலுத்தி வருகிறது அதனடிப்படையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிற 85 நபர்கள் அரசின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் மேலும் அவர்களில் கொரோனோ பாதிப்பில்லாத நபர்களும் கூட வெளியில் எங்கும் செல்லாமல் தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

 இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து திருவனந்தபுரம் வழியாக ஆம்புலன்ஸில்  ஊருக்கு வந்த காய்ச்சல் பாதித்து இருக்கிற ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் திருவனந்தபுரத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்